ராமேஸ்வரம் கடற்கரைக்கு அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்: மரைன் போலீசார் நடவடிக்கை

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2.5 லட்சம் இந்திய ரூபா  பெறுமதியலான 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மரைன் போலீசார் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தியா தமிழ் நாடு இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரை அருகே உள்ள  பூலித்தேவன் நகரில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்து அதை அவித்து பதுக்கி வைக்கப்படுவதாக ராமேஸ்வரம் மரைன்பொலீஸ் பரிசோதகர்  கனகராஜ் க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று பூலித்தேவன் நகரில் மரைன் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது லிங்கம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சுமார் 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் அவித்து  பதப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் கொள் கலனஸகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடல் அட்டைகள் மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர், அண்டா உள்ளிட்ட தளவாட பொருட்களை  பறிமுதல் செய்த மரைன் போலீசார் அந்த இடத்தின் உரிமையாளர் லிங்கம் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் கடல் அட்டைகள் இரவு நேரத்தில் அவிப்பதால்  அந்த பகுதியில்; துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் முறைப்பாடு தெரிவித்தனர்.
மரைன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா?  என்ற கோணத்தில் தொடர்ந்து போலீசார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.
பூலித்தேவன் நகரில் பறிமுதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பெறிமதி இந்திய ரூபாவில்  சுமார் 2.5 லட்சம் ரூபாய் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews