யாழ்.வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடலில் மீனவர் காணாமல்போயுள்ளார்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.. |

யாழ்.வடமராட்சி கிழக்கு குடாரப்பு  கடற்பகுதியில் கடலட்டை பிடிப்பதற்காக கடலில் இறங்கிய மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த மீனவர் படகில் சென்று கடலட்டை பிடிப்பதற்காக கடலினுள் இறங்கியுள்ளார். குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அவருடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை மேலே இழுத்தபோது அவரைக் காணவில்லை என்று படகில் இருந்த ஏனையவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றும் இன்றும் தேடியும் அவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மீனவர் புத்தளம் கற்பிட்டிப் பகுதியைச் சேர்தவர் என்றும்  குடாரப்பு கடற்கரையில் வாடியமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடித்துவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருபவர்களில் ஒருவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews