கரையோர கரப்பதந்தாட்ட போட்டியில் அம்பன் பிங் பொங் வெற்றியீட்டியது….!(video)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடியில் 55 வது காலால் படையணியின் பகுதிக்கு உட்பட்ட கடற் கரையோரத்தை சேர்ந்த 22 விளையாட்டுக் கழகங்களுக்கு கடற்கரையோர கரப்பந்து பயிற்சி 12/01/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12/05/2023 அன்றிலிருந்து தெரிவு போட்டிகள் நடாத்தப்பட்டு நேற்றைய தினம் 14/05/2023 இறுதிப் போட்டி இடம் பெற்றது.

55. வது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன தலமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் வாத்திய இசை முழங்க வரவேற்க்கப்பட்டனர். தொடர்ந்து இராணுவ அணியின் கரையோர கரப்பந்தாட்ட அணியின் ஆசியா பதக்கங்களை வென்ற மகளிர் அணி மற்றும் ஆடவர் அணிகளின் காட்சி போட்டிகள் இடம் பெற்றது.

தொடர்ந்து இறுதி போட்டிக்கு தெரிவாகிய அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழகமும், கொடுக்கிளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகமும் போதியது. அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கான சான்றிதழ்கள், பரிசில்கள், கேடயங்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சுகர்ண போதொட்ட , 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, 56 படைப்பிரிவின் தளபதி மேஜர் கெனரல் காரியவசம், 551 தளபதி பிரிகேடியர் காரிய கரவண, 553 பிரிகேடியர் பெரேரா, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, வடமாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ், வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், வட மாகாண உதவி பொலிஸ் அத்தியஸ்தகர், யாப்பகூவ 306b அரிமா கழக பிரதிநிதிகள் உட்பட பலரும் வழங்கிவைத்தனர்.

இதில் கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர், பொலீசார், கிராம சேவகர்கள், விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள், பார்வையாளர்கள் என பலரும் கலந்து போட்டிகளை கண்டுகளித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews