சந்நிதியான் ஆச்சிரமத்தால் மலையகத்திற்க்கு பல்வேறு உதவிகள்…!

யாழ்ப்பாணம் தொண்டமனாறு செ்வ  சந்நிதியான் ஆச்சிரமம் –  மலையக மக்களுக்கு 813,000 ரூபா பெறுமதியான பல்வேறு உதவிகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.

இதில்  தெமோதரை பிரதேசத்தில் அமைந்துள்ள ப/ சௌதம் தமிழ் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 மாணவர்களுக்கு  200,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும்,
உயர்தர கற்றல் செயற்பாட்டிற்காக பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த மாணவிக்கு ரூபா 160,000  பெறுமதியான மடிக்கணினி ஒன்றும்,
நிவ்பர்க் தோட்டம், எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ பாலவிநாயகர் ஆலய கட்டிட பணிக்காக ரூபா  130,000 நிதி ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்  பூனாகலை –  கபரகலை கிராமத்தில் ஏற்பட்ட   மண்சரிவால் பாதிக்கப்பட்ட  75 குடும்பங்களுக்கு 300,000 ரூபா பெறுமதியான சமையல் பாத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன்
மண்சரிவால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை கிராமத்தை சேர்ந்த புலமைப் பரீட்சையில் தோற்றவுள்ள 5 மாணவர்களுக்கு 23,000 ரூபா பெறுமதியான பயிற்சி புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இச் செயற்றிட்ட  உதவிகளை உதவிகள் சந்நிதியான்  ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்கள் சகிதம்  நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews