யாழில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் மரணம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 9 பேர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், காரைநகரைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும், யாழ். வேம்படியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும், அரியாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

சாவகச்சேரி ஆதார மருத்துவமனை கொரோனா விடுதியில் மட்டுவிலைச் சேர்ந்த 85 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

மீசாலை மேற்கைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.

அத்துடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனை கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews