தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! – நேற்று 2,960 பேருக்கே கொரோனா…!

இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் நாளாந்தக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று குறைவடைந்துள்ளது. கொரோனாத் தொற்று உறுதியான 2 ஆயிரத்து 960 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 71 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,769 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 88 ஆயிரத்து 278 ஆக உயர்வடைந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews