மட்டக்களப்பு கரடியனாற்றில் புதையல் தோண்ட மற்பட்ட லெப்டினன் கேணல் ஒருவர் தேரர் ஒருவர் உட்பட 4 பேர் கைது

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் முற்பட்ட ஈடுபட்ட இராணுவ லெப்டினன் கேணல் ஒருவருடன் 3 இராணுவத்தினர் மற்றும் பௌத்த தேரர் உட்பட 4 பேரை இன்று வெள்ளிக்கிழமை (31) விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

வவுணதீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஈரலக்;குளம் காட்டுபகுதியை சம்பவதினமான இன்று பகல் சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையின் போது அங்கு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ லெப்டினன் கேணல் ஒருவர் கோப்பிரல் ஒருவர், சாஜன் ஒருவர் உட்பட 3 இராணுவத்தினருடன் தேரர் ஒருவர் உட்பட 4 பேரை கைது செய்ததுடன் புதையல் தோண்ட பயன்படுத்திய ஸ்கானிங் மெசின், இராணுவ ரக்வண்டி ஒன்றை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட இராணவத்தினர்  வெலிகந்தை சாலியாபுர முகாமைச் சோந்தவர்கள் எனவும் தேரர் பொல்;காவலை பிரதேசத்தைச் சேர்ந்த எனவும் இவார்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews