கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் பொலிஸ் அதிகாரி மரணம்….!

பொலிஸ் திணைக்களத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 29 ஆவது பொலிஸ் அதிகாரி இவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏ.ஏ.மஹிந்தசிறி என்ற 56 வயதுடைய பொலிஸ் அதிகாரியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர் கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews