அதிபர், ஆசிரியர்களிடம் அமைச்சர் முக்கிய கோரிக்கை!

இலங்கை அரசாங்கத்தின் வருமானம் பெருவீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் சம்பள பிரச்சினை குறித்து அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளதால் சிறுவர்களின் சார்பில் ஆசிரியர்களும் அதிபர்களும் தங்கள் கடமைகளை மீள ஆரம்பிக்கவேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் எவ்வாறான நிலைப்பாடுகளை முன்னெடு;த்தாலும் சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள கடினமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பெரும்பாலான ஆசியர்களும் அதிபர்களும் இணையவழி கற்கைக்கு திரும்புவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் அமைச்சரவை அங்கீகரித்துள்ள நிலையில் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்வதென அதிபர் ஆசிரிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews