மாட்டுப் பட்டிக்கு உள்ளேயே மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய திருடர்கள்….!

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்தானை மூக்குறம்குளம் பகுதியில் பண்ணையாளர் ஒருவரின்
எருமை மாடுகளை மாட்டு பட்டிக்குள்ளேயே இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் இன்று பதிவாகியிள்ளது.
குறித்த சம்பவம்  தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது
நேற்றைய தினம் இரவு வேளை எருமை மாடுகளை காலைக்குள் கட்டி விட்டு அவரது வீட்டுக்கு சென்று இன்று  காலையில் பட்டிக்கு வந்து பார்த்தபோது இனம் தெரியாதவர்களால்  இறைச்சிக்காக  மாட்டுப் பட்டிக்குள்ளேயே  எருமை மாட்டு  கன்றுகளை இறைச்சிக்காக  வெட்டப்பட்டு காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எருமை மாட்டு பட்டி உரிமையாளரால் பொலீசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

Recommended For You

About the Author: Editor Elukainews