சதொச விற்பனை நிலையங்களில் ஒரே தடவையில் 3 கிலோகிராம் சீனியை கொள்வனவு செய்ய முடியும்…!

லங்கா சதொச நிறுவனத்தின் எந்தக் கிளையிலிருந்தும் நபரொருவர் மூன்று கிலோகிராம் சீனியை நிர்ணய விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று சத்தொச விற்பனை நிலையத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய நிர்ணய விலைக்கு அமைவாக சீனியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக ஒரு கிலோகிராம் சிவப்பு சீனி 125 ரூபாய்க்கும் வெள்ளை சீனி 122 ரூபாய்க்கும் பெற்றுக்கொள்ள முடியும்.

சத்தொச விற்பனை நிலையங்களில் போதியளவான சீனி கையிருப்பில் உள்ளது.

சத்தொச விற்பனை நிலையங்களில் இதற்கு முன்பு, ஒரு தடவை ஒரு கிலோகிராம் சீனியை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews