அம்பன் கிழக்கு பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்வதற்க்கு எதிர்ப்பு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில்  அம்பன் கிழக்கு பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ள வேண்டாம் என்று எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அம்பன் கிழக்கு பகுதியில் கடந்த 2010 ம் ஆண்டிலிருந்து மகேஸ்வரி நிதியத்தால் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு பல நூற்றுக்கணக்கான. ஏக்கர் முறை தவறி கடல் மட்டத்திற்க்கு கீழாக பல அடி ஆழத்தில் தோண்டப்பட்ட நிலையில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் அம்பன் கிராம சேவகர் பிரிவி்றக்கு உட்பட்ட இளைஞர்கள் குறித்த  மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு  வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய தினமும் குறித்த மக்கள் பருத்தித்துறை பொலிசாருடன் உரையாடி அவர்களால் எதிர்வரும் திங்கட்கிழமை  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருடன்  இறுதி முடிவு எடுக்குமாறு உடன் பட்டிருந்தனர்.
அதனையும் மீறி இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மேற்பார்வையுடன் மணல் அகழ்வு மற்றும் விநியோகம் இடம் பெற்றது.
இதனாலேயே குறித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துடன் தொடர்பு  கொள்ள முற்பட்ட போதும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் உரிய அதிகாரிகளின் பதிலுக்காக மக்கள் காத்திருப்பதுடன் தற்காலுகமாக உழவு இயந்திரத்தில்  மணல்  ஏற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது.எனினுல் மணலஹ கொண்டு செல்ல வந்த பார ஊர்திகள் மண் கொண்டு செல்ல அனுமதிக்கப்படனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews