இலங்கையில் இயல்பு நிலை பாதிப்பு – களமிறங்கிய இராணுவத்தினர்

இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 10 அலுவலக ரயில்கள் இயக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கரையோரப் பாதையில் நான்கு ரயில்களும் புத்தளம், களனி மற்றும் பிரதான பாதையில் தலா இரண்டு ரயில்களும் கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இயங்கிய சில புகையிரதங்களுக்கு இராணுவப் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இன்று காலை நாடாளவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய தொழிற்சங்க அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவை திணைக்களம், வருமான வரி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களை ​சேர்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் பங்கேற்கவுள்ளனர்.

எனினும் ரயில் ஊழியர்களின் அர்ப்பணிப்பின் காரணமாக இன்று காலை 8.00 மணிவரை 20 ரயில்கள் பயணிகளின் வசதிக்காக இயங்கியுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews