கட்டுத்துவக்கு வெடித்ததில் 3 வயது யானைக்குட்டி பரிதாபகரமாக பலி –

கட்டுத்துவக்கு வெடித்ததில், மூன்று வயது நிரம்பிய பெண் யானைக்குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது என்று வனவிலங்குத் திணைக்களத்தின் அனுராதபுரம் காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திவுல்வெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீமின்னாவல, அலுத்வௌ வாவிக்கு அருகில் குறித்த யானைக்குட்டி உயிரிழந்துக் கிடந்ததைக் கண்டு பிரதேச மக்கள் வழங்கியத் தகவலுக்கு அமைவாக வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் யானைக் குட்டியை மீட்டுள்ளனர்.

சுமார் 3 அடி உயரமான இந்த யானைக்குட்டி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்காகியுள்ளது.

கட்டுத்துவக்கு வைத்திருந்தவர் தொடர்பிலான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

குறித்த நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews