ஜனாதிபதி பிரகடனப்படுத்திய அத்தியாவசிய சேவைகள்

துறைமுகங்கள், விமான நிலையங்கள், பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் அது தொடர்பான சேவைகளை, அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டார்.

இதனூடாக எந்த துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம், எண்ணெய், எரிபொருட்கள் அல்லது நிலக்கரி ஆகியவற்றை வெளியேற்றல், தரையிறக்குதல், சேமித்தல், விநியோகம் செய்தல் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன.

235ஆம் அத்தியாயமான சுங்க கட்டளைச் சட்டத்தின் படி வீதிகள், பாலங்கள், கல்வெட்டுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில் பாதைகள் உட்பட வீதிகள், ரயில் அல்லது விமானம் மூலமான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தலையும் ஜனாதிபதி அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews