13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை: முன்னாள் ஜனாதிபதி!

13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

13ஆவது திருத்த சட்டம் அவசியம் என்று தற்போதைய அரசாங்கம் நம்பினாலும் சிறீலங்கா பொதுஜன பெரமுன அதே கருத்தை கொண்டிருக்கவில்லை.

13 தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டியது அவசியம்.

மக்களின் தேவைகளை தீர்மானிக்கும் ஒரேவழி தற்போதைய நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் கடமை.

எவ்வாறாயினும் அரசிடம் நிதி இல்லாவிட்டால் தேர்தலையும் நடத்த முடியாது.

எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க எமது கட்சி தயாராக இருக்கிறது.

நாம் வெற்றிபெறுவோம் என்பது தெரியும்.

இதனால்தான் நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஒரு தேர்தலையும் தாமதப்படுத்தவில்லை.

தற்போதைய அரசாங்கம் வெற்றி பெறுமா இல்லையா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதால் தேர்தலும் நிச்சயமற்று உள்ளது என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews