சந்நிதியான் ஆச்சிரமத்தால் 7 துவிச்சக்கர வண்டிகளும், 100,000 ரூபா நிதியும் வழஙகிவைப்பு…..!

வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்  371000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும், 100,000 ரூபா நிதியும் நேற்று  வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வாராந்தம் உதவி வழங்கும்  நிகழ்வு நேற்று 24/02/2023 இடம் பெற்றது. இதில்    07 மாணவர்களிற்கு  துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டதுடன் ஆலயம் மற்றும் நடனப் போட்டிகளுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.
மிருசுவில் –  பத்திரகாளி அம்மன் ஆலயத்துக்கு 3ம் கட்டமாக விக்கிரகங்கள் கொள்வனவுக்காக ரூபா ஐம்பதாயிரம்  நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் வழங்கப்பட்டது.
கிளிநொச்சி  –  தமிழ் சங்கத்தின் அனுசரனையில் இடம்பெறும் நடனமயில் போட்டி நிகழ்வுக்காக 2ம் கட்டமாக ரூபா  50,000 நிதியும்  வழங்கப்பட்டது.
அதே வேளை யா/ தொண்டைமானாறு வீரகத்தி மகாவித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் கெருடாவில்  பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கும்
யா/புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்த கல்லூரியில் தரம் 06, தரம் 10, உயர்தரம் என்பனவற்றில் கல்வி கற்கும் கலைமதி வீதி, புத்தூர் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த 3 மாணவர்களிற்கும்,
யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் புலமை பரீட்சையில் சித்தியடைந்த இரண்டு மாணவர்களுக்கும்,
யா/ மத்திய கல்லூரியில் உயர்தரம் கற்கும் சிறுப்பிட்டி மேற்கு பிரதேசத்தை சேர்ந்த மாணவனுக்குமே துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
இதில் கௌரவ  கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், ஆச்சிரம தொண்டர்கள், பக்கர்கள் நலன்விரும்பிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews