கடலில் காணாமல் போனவர்கள் கரை சேரந்தனர்….!

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் கடல் தொழிலிற்க்கி சென்று காணாமல் போனவர்கள் சற்றுமுன் கரை சேர்ந்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நேற்று முன்தினம் பிற்பகல் நான்கு மணியளவில் கடற்றொழுலிற்கு சென்ற ஆதிகோவிலடியை சேர்ந்த இருவர் நேற்று முதல் கடலில் தொடர்பு  களற்று இருந்த இரண்டு மீனவர்கள் தற்போது கரை திரும்பினர்.
நேறறைய தினம் எல்லை  தாண்டிய இந்திய இழுவைமடி படகால் சேதமாக்கப்பட்ட படகு ஒன்றில் தெயவாதீனமாக படகுகள் சேதமான நிலையில் இருவர் மற்றைய மீனவர்கள் உதவியுடன் கரை சேர்ந்தனர்.
ஒரு படகும் இருவரும் தொடர்புகளற்று இருந்த நிலையில் ஆதிகோவிலடி மீனவர்களால் நேற்றும் இன்றும் பல படகுகளில் சென்று தேடிக் கொண்டிருந்த நிலையில் உள்ளூர் இழுவைப்படகு ஒன்றினால் கட்டியிழுக்கப்பட்டு கொண்டு வந்திருந்த நிலையில் பின்னர் கடலில் தேடிச் சென்ற பிரதேச மீனவர்களால் அழைத்துவரப்பட்ட நிலையில் அர்கள் இருவரும் சோர்வுற்ற நிலையில்  வல்வெட்டித்துறை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பபட்டு பினனர் வீடு திரும்பியுள்ளனர்.
வலைகள் மற்றும் படகு சேதமானது தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து வல்வெட்டித்துறை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews