தனமல்விலவில் கஞ்சா தோட்டம் முற்றுகை 8410 கஞ்சா செடிகள் மற்றும் துப்பாகி ஒன்று மீட்பு

தனமல்வில பொலிஸ்  பிரிவிலுள்ள அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கஞ்சா தோட்டங்களை விசேட அதிரடிப்படையினர் இன்று ஞாயிறுக்கிழமை (19) முற்றுகையிட்டனர் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட்டம் 8410 கஞ்சா செடிகளை பிடுங்கி அழித்ததுடன் உள்ளூர் தயாரிப்பு ஒன்றை மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிசார் தெரிவித்தனர்.

கதிர்காமம் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அதிரடிப்படை கட்டளைத்தளபதி சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருணஜெய சுந்தரவின் ஆலோசனைக்கமைய கதிர்காம விசேட அதிரடிப்படை சப் இன்பெக்ஸ்டர் வை.பி.ஏ. சுலோச்சனா தலமையிலான அதிரடிப்படையினர் சம்பவதினமான இன்று காலை 8.30 மணிக்கு அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிட்டுவந்த இரண்டு கஞ்சா தோட்டங்களை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து கஞ்சா பயிரிட்டுவந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஒடியதுடன் அங்கிருந்த ஒரு  ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த இருந்த 5 அடி உயரம் கொண்ட 7600 கஞ்சா செடிகளையும் அடுத்து தோட்டத்தில் 20 பேச் நிலப்பரப்பில் பயிரப்பட்டிருந்த 3 அடி உயரம் கொண்ட 810 கஞ்சா செடிகள் உட்பட 8410 செடிகளை பிடுங்கி தீயிட்டு அழித்தனர்

அதேவேளை அங்கிருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மற்றம் மருந்துக்களை மீட்டு அதிரடிப்படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews