யாழ் மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உட்பட வடக்கில் 13 கொரோனா மரணங்கள் பதிவு.. |

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உட்பட வடக்கில் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வரப்பிரகாசம் கிளரம்மா (வயது 85),  உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக நேரடியாக பிசிஆர் உள்வாங்கப்பட்ட P.இளமுருகன் (வயது 64), ஜெயசங்கர் சுபாஜினி (வயது 47), அடையாளம் காணப்படாத ஒருவர் (அறிக்கையில் பெயர், வயது குறிப்பிடப்படவில்லை),  யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சங்கானையைச் சேர்ந்த 64 வயதுடைய பெண், தென்மராட்சி குடமியன் பகுதியில் வசித்துவந்த 97 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. வடமராட்சியிலும் இருவர் வீடுகளில் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கும் கொரோனாத் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயதுடைய முதியவர், அல்வாயைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஆகியோரே வீடுகளில் உயிரிழந்த நிலையில்

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த, 

கிருஷ்ணன் தவபாக்கியம் (வயது 73), பெரியண்ணா தங்கராசா (வயது 72), தர்மலிங்கம் மகேஸ்வரி (87)

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த,

செல்லத்துரை கந்தசாமி (வயது 67),

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த, 

மனோன்மணி (வயது 76) ஆகியோர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews