இந்தியன் இழுவைமடி படகு மோதியதில் இருவரை காணவில்லை, இருவர் கரை சேர்ந்ததுள்ளனர்….!

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் எல்லை தாண்டிய இந்தியன் இழுவைமடி படகு மோதியதில் இருவரை காணவில்லை, இருவர் கரை சேர்ந்ததுள்ளதாக சற்றுமுன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்றைய தினம் கடலிற்கு தொழிலிற்க்காக இரண்டு படகுகளை எல்லை தாண்டிய இந்திய இழுவைமடி படகு மோதியதில் இரண்டு படகுகள் பலத்த சேதமாகியுள்ளதாகவும் சேதமான ஒருபடகில் சென்ற இருவரும் தெய்வாதீனமாக கரை சேரஸந்துள்ளதாகவும், மற்றைய படகு கடலில் சேதமடைந்த நிலையில் காணப்படுவதாகவும் ஆனால் அதில் சென்ற இரண்டு பேரையும் கடலில் காணவில்லை என்றும் தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகவன் மற்றும் வளயா எனும் இருவருமே இதுவரை கரை திரும்பவில்லை என மீனவர் சங்க தகவல்கள் தெரிவிப்பதுடன் மீனவர்களால் தேடப்பட்டு இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது கடற்படை தேடிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews