இராணுவ வீரர்களுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து பறந்த கடைசி இங்கிலாந்து விமானம் –

 ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை நிறுத்திக்கொண்ட இங்கிலாந்து இராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, சர்வதேச நாடுகள் தங்களது மக்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தின. இங்கிலாந்து இந்த பணியைத் தீவிரப்படுத்தியிருந்தது.

அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் மக்களையும், தங்களுக்கு உதவிய ஆப்கானியர்களையும் மீட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற காபூல் சர்வதேச விமான நிலையத்தை சுற்றி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அங்கிருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை நிறுத்திக்கொண்டு இங்கிலாந்து இராணுவ வீரர்களுடன் காபூலிலிருந்து இங்கிலாந்தின் கடைசி விமானம் புறப்பட்டுள்ளது.

இதன்போது காபூலில் இருந்து புறப்பட்ட 256 வீரர்கள் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷைர்-ல் உள்ள இராணுவ தளத்திற்கு சென்றடைந்துள்ளனர்.

காபூலில் இருந்து இராணுவ விமானம் மூலம் கடந்த 2 வாரங்களில் 15,000க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து குடிமக்களை வெளியேற்றியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews