மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாடு: முதல் ஆட்சேபனையை முன்வைக்க தயாராகும் இலங்கை மின்சார சபை!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதித்ததாகக் கூறி ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை நிராகரிக்குமாறு கோரி ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​இலங்கை மின்சார சபை சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இந்த ஆட்சேபனையை முன்வைப்பதாக தெரிவித்தார்.
காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த முறைப்பாடு அழைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews