யாழில் இடம்பெறும் தேசிய சுதந்திர நிகழ்வில் கலாச்சார வாகன பேரணிக்கும் ஏற்பாடு!

யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஐந்து மாவட்டங்களின் கலாச்சாரங்களை உள்ளடக்கிய வாகன பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் வடக்குஅபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் ல.இளங்கோவன் தெரிவித்தார்.

நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் முக்கியமான நிகழ்வு நாளைய தினம் கொழும்பிலும் அத்தோடு கண்டியில் பிரார்த்தனைகளும் இடம்பெற்று எதிர்வரும் 11ம் திகதி யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்த நிகழ்விலே மூன்று முக்கியஅம்சங்கள் இடம் பெறவுள்ளன இந்தியாவால் தரப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தினை முறையாக கையளித்து அதனை செயற்படுத்தும் முகமாக காலை நிகழ்விலே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன

அதைத்தொடர்ந்து மாலை நிகழ்வாக ஐந்து மாவட்டங்களும் தங்களுடைய மாவட்டத்தினுடைய தனித்துவமான பிரசித்தி பெற்ற கலை அம்சங்களை உள்ளடங்கிய வாகன பேரணி ஒன்று இந்திய கலாச்சார மத்தியத்தில் இருந்து ஆரம்பமாகி யாழ் நகர் வரை சென்று நிறைவு பெறுவதற்குரியவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அதன்பின்பதாக மாலையில் கலாச்சார இசை நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கலாச்சார இசை நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள முடியும்.

தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டது

மேலும் யாழ் மாவட்ட அரச அதிபர் வடக்கு ஆளுநர், வட மாகாணபிரதம செயலாளரின்பங்குபற்றுதலில் நிகழ்வினை திறம்பட நடாத்துவதற்கு மாகாண மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews