ஏழு வகையான பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்களுக்குத் தடை!

ஒரு தடவை மட்டும் பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்தும் ஏழு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை தடை செய்வதுத் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், அமைச்சரவையில் நாளை (30) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக் ஸ்ட்ரோ, முள்ளுக்கரண்டி, கரண்டி, குடிநீர் கோப்பை, கத்தி, இடியப்பத் தட்டு மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனால் செய்யப்பட்ட பூ மாலைகள் ஆகியவற்றையே தடைசெய்ய அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சசே’ பக்கெட்டுகள் உள்ளிட்ட ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திப் பொருட்களை கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியில் இருந்து தடை செய்ய அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து உக்காத உணவுத்தாள்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews