றகமா நிறுவனத்தின் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்த்திட்டம்….!

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் வேண்டுகோலுக்கிணங்க றகமா நிறுவனத்தினரால் மாந்தை கிழக்கு பிதேசத்திற்குட்பட்ட  ஒட்டறுத்தகுளம், வண்டிகட்டு குளம், பாலப்பாணி குளம், கிடாப்பிடித்த குளம் ஆகிய குழங்களில் நன்னீர் வளர்ப்பு திட்டம்  27/01/2023 வெள்ளிக்கிழமை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தினை மந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் றகமா நிறுவனத்தின் செயலாளர் நாயகம் இணைந்து ஆரம்பித்து வைத்தனார்.
இச்செயற்றிட்டத்திற்காக குறித்த குழங்கள் உள்ளடங்கிய கமக்கார  அமைப்பினர் 10000 மீன் குன்சுகளையும்,  றகமா நிறுவனத்தினரால் 50000 மீன் குன்சுக்களும் குறித்த குளங்களுக்கு விடப்பட்டுள்ளன.
உணவு உற்பத்தியினை அதிகரிக்கும் செயற்த்திட்டத்தின் கீழ் தேவைப்பாடுடைய 4 கிராமங்களில் 120 நன்னீர் மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் குடும்பங்களிர்க்கு நிலையான வருமானத்தினை பெற்றுக்கொடுப்பதற்காகவும் பிரதேச மக்களிற்கன போசக்கான உணவினை பெற்றுக்கொடுப்பதற்காகவுமே இச் செயற்த்திடடம் நடைமுறைப்படுத்தப்படுவதாக றகமா நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் றகாமா நநிறுவன உத்தியோகத்தர்கள், கிராம மக்கள், மீனவர்கள், கமகயகார அமைப்பு பிரதிநிதிகள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews