யாழ்.மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார். 

மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் மாலை கிடைத்த அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் புதிய தொற்றாளர்களாக 223 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.  இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை 11179 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் மாவட்டம் கொரோனா தொற்றினால் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ள நிலையில் மக்கள் ஒவ்வொருவரும் தமது பொறுப்பை உணர்ந்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா அனர்த்தத்தில் இருந்து மீண்டு வர முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews