இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் வழங்கிய வாக்குறுதி

இலங்கையில் விரையில் நிலையான பலத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பளத்தில் வரி செலுத்தல், வற் வரி போன்ற பொருளாதாரத்தை மீட்பதற்காக நடவடிக்கைகளினால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா டெலிகொம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் போன்ற அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் ஊடாக நாட்டில் டொலர் கையிருப்பு தொகையை அதிகரிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகங்களுக்கு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

புதிய வரிக் கொள்கைகள், நஷ்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையான சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு உதவும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews