நாட்டில் 3 கிழமைக்கு தேவையான சீனி மட்டுமே கையிருப்பில்! 100 ரூபாவால் அதிகரிக்கபோகும் விலை.. |

நாட்டில் 3 கிழமைக்கு தேவையான சீனி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இறக்குமதியாளர் சங்கம் தொிவித்திருக்கின்றது. 

ஏதாவது ஒரு விதத்தில் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதியளிக்காவிடத்து நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என

சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உபதலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ சீனியின் விலை 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் சீனியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உற்பத்திகளுக்கான விலையை அதிகரிப்பது தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தவிடயம் குறித்து கருத்துரைத்த சிற்றூண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஒரு கோப்பை தேநீரின் விலை 25 ரூபாவாக

அதிகரிக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.இது குறித்து  நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews