ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள தடை உத்தரவு

இலங்கைக்கு மேலும் பல வகையான பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற ரீதியில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, தக்காளி, லீக்ஸ், பூசணி, வற்றாளை கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, வெள்ளரிக்காய், பீன்ஸ் மற்றும் கீரைகள் உள்ளிட்ட காய்கறிகள் கொய்யா, மாம்பழம், தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பழங்கள், காளான் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள், பப்படம் மற்றும் தொடர்புடைய பொருட்கள், குரக்கன் மற்றும் தொடர்புடைய பொருட்கள், பேரிச்சம்பழம், பச்சை பட்டாணி, முந்திரி, சோயாபீன் பொருட்கள், தேங்காய் மற்றும் தொடர்புடைய பொருட்கள், ஷாம்போக்கள், கண்டிஷனர்கள் மற்றும் சாயங்கள், பவுடர்கள், உதட்டுச்சாயம், கிரீம்கள், அத்துடன் வாசனை திரவியங்கள், ஆண்கள் உடைகள், பெண்கள் கடிகாரங்கள், ஆடைகள், பாதணிகள், தோல் மற்றும் ரப்பர் தொடர்பான பொருட்கள், மட்பாண்டங்கள் மற்றும் சமையலறை பொருட்கள் ஆகியவற்றிற்கு இவ்வாறு தடை விதிக்ககப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews