விஜயனின் இலக்கு ஒருகோடி தாவரங்கள் நடுகை விசுமடுவில் இடம் பெற்றது.

இலங்கை முதல் உதவிச் சங்கம் மற்றும் இந்து சமய தொண்டர் சபையினரால் சமூக செயற்பாட்டாளரும், முன்னாள் இலங்கை முதலுதவி சங்க உறுப்பினருமான விஜயனின்  ஒரு கோடி தாவரங்கள் நடுகைத் திட்டத்தின்  இரண்டாவது நிகழ்வு விசுவமடுவில்  அமைப்பின் தொண்டர் செல்வன் கபில்ராஜ்  இல்லத்தில் நேற்று முன்தினம்  04.01.2023 மாலை 04:30 மணியளவில் சந்தணமரம், மாதுளை, கொய்யா,ஐம்புநாவல்,அகத்தி, வெற்றிலை போன்ற  தாவரங்கள் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை முதல் உதவி சங்க இந்து சமயத் தொண்டர் சபை தேசிய ஆணையாளர் வை.மோகனதாஸ் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இலங்கை முதல் உதவி சங்க இந்து சமயத் தொண்டர் சபை மகளீர் பிரிவு பொறுப்பாசிரியர் திருமதி ச.கேதீஸ்வரி, மகளீர் பிரிவு கண்காணிப்பாளர் செல்வி பா.நிலாமதி, இலங்கை முதல் உதவிச் சங்கம் இந்துசமய தொண்டர் சபை தேசிய கண்காணிப்பாளர் வை.ஜெகதாஸ் , இலங்கை முதல் உதவி சங்க இந்து சமயத் தொண்டர் சபை தொண்டர்கள், கண்காணிப்பாளர்கள், கபில்ராஜ்சின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டு மரங்கள் மற்றும் தாவரங்களை நாட்டிவைத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews