லீசிங் நிறுவனங்களுக்கு கடிவாளம்! புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள பொலிஸ்மா அதிபர்.. |

மாதாந்த கட்டுப்பணத்தை செலுத்தாமல்  விட்டால்  லீசிங் நிறுவனங்கள் வாகனங்களை கையகப்படுத்துவதற்கு புதிய நடைமுறையினை பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார். 

இதன்படி வாகன உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தால், குறித்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து சட்ட ரீதியாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகன திருட்டு போன்ற குற்றங்கள் நடந்தால், பொலிஸார் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குத்தகை அல்லது நிதி நிறுவனங்கள் வாகனங்கள் அல்லது உபகரணங்களைப் பெறுவது குறித்து சில பொலிஸ் நிலையங்களில் உரிமையாளரால் செய்யப்படும் முறைப்பாடுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும்,

இனிவரும் காலங்களில் அத்தகைய முறைப்பாடுகளை ஏற்று உரிய விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews