முக்கால் கியூப் களிமண்ணிற்க்கு அனுமதி பத்திரம், 6 உழவு இயந்திர சுமை களி மண் எற்ற அனுமதித்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர்….!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட அம்பன் கிழக்கு பகுதியில் 2013  ம் ஆண்டு  காலப்பகுதியில் அப்போது மணல் அகழ்வில் ஈடுபட்ட மகேஸ்வரி நிதியத்தால் அமைக்கப்பட்ட கழிமண் வீதியை அகற்றி பிறிதொரு பிரதேச சபையில் பதிவு செய்யப்படாத தனிநபருக்கு செல்வாக்கு அடி்படையில் வீதி அமைப்பதற்க்கு  அவத வீதி அமைத்த களிமண்ணை உழவு இயந்திரத்தில் ஏற்றி வீதி அமைத்த சம்பவம் நேற்று மதியம் இடம் பெற்றுள்ளது.
குறித்த வீதி அருகிலுள்ள மாதா அம்மன் ஆலயத்திற்க்கு செல்வதற்க்கும், ஆடு மாடு வளர்ப்போர் தமது ஆடு மாடுகளுக்கு இலை குழைகளை வெட்டிக் கொண்டு வரும்  நிலையிலேயே அவ் வீதி பிரதேச செயலரால் அகற்றப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த வீதியை அகற்ற வேண்டாமென அம்பன் கிழக்கு, அம்பன்  மேற்க்கு மக்களால் அம்பன் கிராம சேவகரூடாக பிரதேச செயலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் அது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரால் நொராகரிக்கப்பட்டிருந்த நிலையில் நேறறு அம்பன் மேற்க்கு ,கிழக்கு மக்கள் குறித்த வீதியில் களி மண் ஏற்றியோருற்க்கும் இடையில் நீண்ட வாக்குவாதங்கள் இடம் பெற்றுள்ளன.
இருந்தும்  வீதியில் களி மண் ஏற்றியோரால் ஆறு உழவு இயந்திர. சுமை கழிமண் ஏற்றப்பட்டுள்ளது.
இதே வேளை. 75( 3/4) கியூப் களி மண் மட்டும் ஏற்றுவதற்க்கு ஒரு அனுமதிப் பத்திரத்தில் இரண்டு உழவு இயந்திரத்திற்க்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தும் ஆறு உழவு இயந்திர சுமை களி மண் எப்படி ஏற்றப்பட்டது. என கிராம இளைஞர்களால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குறித்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கட்சி ஒன்றின் பெயரால் இவ் அனுமதி பபத்திரம் கிராம சேவகர் சிபாரிசு இன்றி வழங்கப்பட்டுள்ளதாக கிராம இளைஞர்கள் குற்றம் சுமத்தயுள்ளனர்.
இது விடயமாக வடமராட்சி கிழங்கு பிரதேச செயலருடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews