அரச ஊழியர்களின் சம்பளத்தில் வெட்டா..? அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்.. |

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் எந்த தீர்மானமும் இல்லை. என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (24) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரவை அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதிக்கு நன்கொடையாக வழங்கும் தீர்மானம், அரசு துறையில் ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல என்றார்.

இன்று வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதிக்கு வழங்க அமைச்சரவை நேற்று முடிவு செய்திருந்தது.

அமைச்சரவை அதன் வாராந்திர கூட்டத்திற்கு நேற்று கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு அரச துறையிலோ

அல்லது தனியார் துறையிலோ ஊதியக் குறைப்புக்கான முயற்சியாகும் என்ற தகவலில் உண்மையில்லை என்றும் அழகப்பெரும தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews