எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகளால் தொடர் பாதிப்பு, பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் நாளாந்தம் இழப்பு….!

வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை இழந்து வருவதாக வடமராட்சி பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல வருடங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி நாளாந்தம் வடமராட்சி கடற்பரப்பில் இழுவை மடி தொழிலில் ஈடுபடுவதால் கடல் வழங்கப்படும அழிக்கப்படுவதுடன் வடமராட்சி பிரதேச மீனவர்களின் வலைகளும் நாசாமாகி வருகின்றன
இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடம் பல தடவைகள் முறையீடு செய்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை எனவும், போலீஸ் நிலத்தல் முறைப்பாடு செய்து முறைப்பாட்டுத் துண்டை தருமாறும் அமைச்சர் தெரிவித்து பல முறைப்பாட்டு துண்டுகள் கொடுக்கப்பட்டும்  எந்த இழப்பீடும் இல்லை என்றும், கரையிலிருந்து சுமார் மூன்று கடல் மைல் தூரம் வரை இந்தியன் இழுவைமடி படகுகள் வருவதாகவும், கடற்படையும் பலதடவைகள் அவர்களை விரட்டியும் மீண்டும் மீண்டும் அவர்கள் எல்லை தாண்டிய மீன்பிடியில் இடுபடுவதாகவும் கலவையுடன் தெரிவிக்கும் மீனவர்கள், கடற்றொழில் அமைச்சர், மற்றும் கடற்படை அனுமதியளித்தால் எல்லை தாண்டிய இழுவை மடி படகுகளை தாம் கைப்பற்றி உரிய தரிப்புக்களிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவிக்கும் அவர்கள், தாம் பல இலட்சம் வங்கிகளில் கடன் பெற்று வலைகளை கொள்வனவு செய்து தொழிலில் ஈடுபடும் தாம் நாளாந்தம் இவ்வாறு வலைகளை இழந்து வருவதானால் பொருளாதார ரீதியாக தமது குடும்பம் வீதிக்கு வந்துள்ளதாகவும், நூற்றுக்கு மேற்பட்ட படகுகள் தொழிலிற்க்கு செல்லாது கரையில் கட்டப்பட்டுள்ளதாகவும் தமது துயரம் எப்போது தீரும் என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள்

Recommended For You

About the Author: Editor Elukainews