தருமபுரம் முசுரம்பட்டி கிராமத்தில் வீட்டுத்திட்ட உள்ளக வீதிகளில் வெடிப்பு, மக்கள் விசனம்…!

கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தருமபுரம் முசுரம்பட்டி கிராமத்தில் வீட்டுத்திட்ட உள்ளக வீதிகள் கடந்த 2020/01/20 அன்று நிர்மானிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வீதிகளில் சில வீதிகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பூரணப்படுத்தப்பட்ட கொங்றீட் வீதிகள் வெடிப்படைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

புதிதாக நிர்மானித்துள் கொங்றீட் வீதிகள் முழுமையாக பூரணப்படுத்திய பின் தற்பொழுது அவ் வீதிகள் இடையிடையே வெடித்து காணப்படுகிறது எனவும் நாளடைவில் பாரிய வாகனங்கள் செல்லும் போது வீதிகள் முழுமையாக சேதமடையும் எனவும் இவ் வீதிகள் பயன்படுத்த முடியாத நிலை வரும் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி வேலைகள் 2020ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத்திட்டத்தினூடாக முசுரம்பிட்டி வீட்டுத்திட்ட உள்ளக வீதிகள் 2.9கிலோ மீற்றர் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்

Recommended For You

About the Author: Editor Elukainews