400 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடும் குழந்தை! 16 மணி நேரமாக தொடரும் மீட்பு பணி

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் 8 வயது குழந்தையொன்று விழுந்து சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குழந்தையை கிணற்றிலிருந்து மீட்கும் பணி சுமார் 16 மணி நேரமாகியும் தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை சுமார் 55 அடி உயரத்தில் சிக்கியிருக்கலாம் எனவும், குழந்தையின் மேல் சேறு படிந்துள்ளதால் குழந்தையின் நிலைமையை கண்டறிய முடியவில்லை எனவும் ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஆழ்துளை கிணற்றில் சி்க்கியுள்ள குழந்தை 55 அடி ஆழத்தில் உள்ளதால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதாகவும், இரவு நேரம் என்பதால் இருட்டை கண்டு சிறுவன் பயப்படாமல் இருக்க கிணற்றி்ல் ஒளி பாய்ச்சப்பட்டு வருவதாதவும் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தை கிணற்றில் விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews