நாடளாவிய ரீதியில் பாரியளவில் களமிறக்கப்படும் சிறிலங்கா அதிரடிப்படை – பாடசாலைகளே இலக்கு!

இலங்கையில், பாடசாலைகளுக்கு அருகில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அதற்கமைய சிறைச்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பவற்றில் கடமையாற்றி வரும் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமையில் இருந்து மீளெடுக்கப்பட்ட அதிரடிப்படையினரை பாடசாலைகளுக்கு அருகில் கடமையில் ஈடுபடுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதி காவல்துறைமா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய போதைப் பொருள் குறித்த முறைப்பாடுகளை செய்ய 0112580518 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து 24 மணித்தியாலங்களும் முறைப்பாடு செய்ய முடியும் என விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews