உலக சுகாதார நிறுவனத்தின் கோரிக்கை…!

தடுப்பூசி ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி மூன்றாவது டோஸ் திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் நிறுத்திவைக்குமாறு உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த மாதமும் அவர் இதுபோன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அந்த கோரிக்கையை முன்வைக்கும்போதே இஸ்ரேல் மூன்றாவது டோஸ் செலுத்தும் பணியை ஆரம்பித்துவிட்டது.
ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உலக சுகாதார மையம் ஆரம்பநிலையிலேயே வேண்டுகோளை நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் டெட்ரோஸ் அதோனம் நேற்று ஹங்கேரியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “இரண்டு மாதங்களாவது தடுப்பூசி மூன்றாவது டோஸை நிறுத்திவைக்கவும் என்று கோரினார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “தடுப்பூசி தானம் தொடர்பாக உண்மையிலேயே நான் மிகுந்த விரக்தியில் உள்ளேன். உலகின் பல நாடுகள் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வழியில்லாமல் தவிக்கும் சூழலில் சில நாடுகள் மூன்றாவது டோஸை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது டோஸ் போடும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு தானமாகக் கொடுக்கலாம்.
இதுவரை உலகளவில் உற்பத்தியாகியுள்ள 4.8 பில்லியன் டோஸ் தடுப்பூசியில் 75வீத தடுப்பூசிகள் 10 நாடுகளே பயன்படுத்தியுள்ளன. தடுப்பூசி அநீதி கரோனா வைரஸ் மேலும் பலமுறை உருமாறி அச்சுறுத்தும்.
இந்த உலகில் உள்ள அனைவரும் பாதுகாப்பான நபராக மாறும் வரை எந்த ஒரு தனிநபரும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கூறமுடியாது” எனத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews