மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவித்தல்

நாளை முதல் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் மின் தேவை மேலாண்மை பற்றிய புதுப்பிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தெற்கு மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் ஒரு மணித்தியால இரவு நேர மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

டிசம்பர் 15ஆம் திகதி நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியை தேசிய மின்வட்டத்துடன் இணைத்துக்கொள்வதன் மூலம் அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும், இரவு வேளைகளில் மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதேநேரம், நாடளாவிய ரீதியில் இரவு நேர மின்வெட்டு ஒரு மணி நேரம் குறைக்கப்படும்.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews