வைத்தியர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

பொத்துவில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராகவும் வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மட்டக்களப்பில் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியர்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

“பொத்துவில் வைத்தியசாலையின் வைத்தியர்களின் உயிர் அச்சுறுத்தலுக்கு எதிராக நாம்”, “நாங்கள் பொத்துவில் வைத்தியசாலையுடன்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகையுடன் அமைதி வழியாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொத்துவில் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதுடன் வைத்தியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் பொத்துவில் வைத்தியசாலையில் வைத்தியர்களின் நியாயமான போராட்டத்திற்கு கிழக்கு மாகாணம் தழுவிய நிலையில் வைத்தியர்களின் ஆதரவு வழங்கப்படுவதாகவும் இங்கு வைத்தியர்களின் தெரிவிக்கப்பட்டது.

பொத்துவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களுக்கு எதிரான பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திவருவதாகவும் அங்கு வைத்தியர்கள் சுமுகமான சூழ்நிலையில் கடமையாற்றமுடியாத நிலைமை காணப்படுவதாகவும் இங்கு வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews