அநாமதேய துண்டுப்பிரசுரத்துக்கும் எமக்கும் தொடர்பில்லை – ஏற்பாட்டுக்குழு

சம்பூர் ஆலங்குள மாவீரர் தின ஏற்பாடுகள் தொடர்பாக அம்மன்நகர் கிளிவெட்டிப் பிரதேசங்களில் இனம் தெரியாத விசமிகளினால் எறியப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களுக்கும் ஏற்பாட்டுக்குழுவுக்கும் எவ்விதமான சம்பந்தங்களும் கிடையாது.குறித்த துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் யாரும் அக்கறை கொள்ளவோ அலட்டிக் கொள்ளவோ தேவையில்லை.அத்துண்டுப்பிரசுரங்களில் வடிவேல் மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்க மறந்தது போல செய்தவர்கள் தம்மைத் தாமே அடையாளப்படுத்தும் விடையங்களையும் விட்டுள்ளனர்.இவ்வாறான அறிவித்தல்கள் வெளியிடப்படும் போது ஏற்பாட்டுக்குழுவின் உத்தியோகபூர்வக் கடிதத்தலைப்பு மற்றும் முத்திரையுடன் கூடிய கையொப்பங்களுடன் வெளியிடப்படும் என்பதனை அறியத்தருவதுடன் இவ்வாறான குழப்பகரமான அறிவித்தல்களை எமது புலம்பெயர் தேச உறவுகளோ அரசியல் கட்சிகளோ அல்லது மாவீரர்களின் பெற்றோர்களோ நம்பி ஏமாற்றமடையவோ அல்லது மனக்குழப்பங்களுக்குள்ளாகவோ வேண்டாம் எனத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
க.பண்பரசன்
தலைவர்
நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு
சம்பூர் – ஆலங்குளம்

Recommended For You

About the Author: Editor Elukainews