அரசியல் தீர்வை வழங்குவது ஒன்றே இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வழி! யாழ்.மாநகர முதல்வர் ஐ.நா குழுவிடம் வலியுறுத்தல்.. |

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைய முடியாது. என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்திருக்கின்றார்.

நேற்று வெள்ளிக்கிழமை ஐ.நாவுக்கான ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகார ஒருங்கிணைப்பாளர் மற்றும் இலங்கைக்கான ஐ.நா நிறுவன ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான குழுவினரை சந்தித்த பின் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறிய விடயங்கள் தொடர்பில்

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே முதல்வர் இதனை தொிவித்துள்ளார். தமிழ் மக்கள் நீண்ட காலமாக அரசியல் தீர்வுக்கான போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

இலங்கை பொருளாதார பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீட்டு மேற்கொள்வதற்கான அரசியல் சூழல் ஏற்படுத்தப்படவில்லை.

தற்போதைய அரசாங்கமும் தொடர்ந்து தமிழர்களின் காணிகளை சுவீகரித்துவரும் நிலையில் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் மத வழிபாட்டு இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை அரசாங்கத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர் பகுதிகளில் தொடர்ச்சியான போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அரசாங்கம் தொடர்ந்து பாராமுகமாக செயல்படுகிறது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை – காரைக்கால் கப்பல் சேவை போன்றன ஆரம்பிக்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகிறது.

ஆகவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு ஐ.நா உதவவேண்டும் என கோரிக்கை விடுத்தேன் என முதல்வர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஐநா பிரதிநிதிகள் தமிழ்ர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தொடர்ந்து அக்கறையாகச் செயற்படுவதோடு யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக அவர்கள் தொிவித்ததாக முதல்வர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் ஐ.நாவுக்கான ஆசிய பசுப் பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி பீட்டர் நிக்கோலஸ் டியு, மற்றும் இலங்கைக்கான ஐ.நா பதிவிட பிரதிநிதி ஹான சிங்கர் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவன அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews