மரம் நடுவோம் தேசத்தை காப்போம். தொனிப்பொருளில் கிளிநொச்சியில் மரம் நடுகை…!

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவின் அனுசரணையுடன் கார்த்திகை மாதமான நேற்று (17.11.2022) மரநடுகை மாதமாக கொண்டு இரணைமடு குளம் அண்டிய பிரதேசங்களில் 500 மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன.
மரம் நாட்டும் நிகழ்வில் பிரதம விருந்தினராக விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன மீன்பிடி நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின்  செயலாளர் அ.சிவபாலசுந்தரன். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன். வடக்குமான நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி வே.பிரேம்குமார் ஆகியோர்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews