சமையல் எரிவாயு தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள உறுதி…!

நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாயுவையும் சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ள முடியும் என அரசாங்கம் மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளது.

இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையிலேயே திங்கள் முதல் தட்டுப்பாடின்றி சந்தையில் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

தற்போது லிட்ரோ கேஸ் நிறுவனம் தமது முந்தைய விலையில் எரிவாயு கொள்கலன்களை விநியோகித்து வருகின்றது.

அதேவேளை, லாஃப்ஸ் நிறுவனம் கடந்த 20ஆம் திகதி முதல் புதிய விலையில் சந்தைக்கு சமையல் எரிவாயுவை விநியோகிக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews