வடக்கில் காணிகளை உறுதிப்படுத்துபவர்களுக்கு உதவ தயார் – வடக்கு ஆளுநர்.

யாழில் 2ஆயிரத்து749 பேரின் தனியார் காணிகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ள நிலையில் எஞ்சியோர் தமது  காணிகளை உறுதிப் படுத்தும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உதவுவதற்கு ஆளுநர் செயலகம் தயாராக இருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வட மாகாணத்தில் தனியார் காணிகள் தொடர்பில் அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் நில அமைச்சகம், நில ஆணையாளர் பொது அலுவலகம்,  நில அளவைத் துறை ஆகியவற்றின் கூட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தற்போதைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அனைத்து துறையினரையும் உள்ளடக்கி ஆராயப்படும்.

கொழும்பு காணி ஆணையாளர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி அதிகாரிகளால் அனைத்து நில உரிமை கோருபவர்களையும் சந்தித்து, சம்பந்தப்பட்ட துறைகளுடன் தனிப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும்.
தனியார் நில உரிமைகோரல்கள் அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாகாண நில ஆணையர், உரிமை தீர்வு பிரிவு, ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து உரிமை கோரப்பட்ட அனைத்து தனியார் நில உரிமையாளர்களின் விவரங்களையும்  இவ்வருட இறுதிக்குள் மாவட்ட செயலாளர் அவர்கள் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட செயலாளர்களால் நில உரிமை கோரல்கள் 4 ஆயிரத்து 004 பதிவுகள் சரிபார்க்கப்பட்ட நிலையில் 2 ஆயிரத்து 749 உரிமையை உறுதிசெய்யப்பட்டது.
மேலும் வனவளத்துறையினரிடம் காணப்படும் நிலங்களை உரிய முறையில் அடையாளம் கண்டு பொதுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews