தமிழர் பகுதியில் இரு வெவ்வேறு சம்பவங்களில் அரச பேருந்து சாரதிகள் கைது!

வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணியொருவர் தவறி விழுந்தமை தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கைது நடவடிக்கை நேற்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த பேருந்தில் வருகை தந்த நபர் இறங்குகுவதற்காக பேருந்தின் கதவோரத்தில் நின்ற வேளை தவறி விழுந்து காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் கோமரங்கடவல-பக்மீகம பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அசித நாமல் வீரகந்த (36வயது) என்பவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் அதி உச்ச மதுபோதையில் இருந்ததாகவும் மேலதிக சிகிசைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த விபத்து தொடர்பில் அரச பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர் புளியங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக் கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்திய சாரதி மது போதையில் இருந்துள்ளார்.

சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் புளியங்குளம் பகுதியில் மாலை 6 மணியளவில் குறித்த பேருந்தினை மறித்து சாரதியை சோதித்துள்ளனர்.

அதன் போது சாரதி மது போதையில் இருந்தமையை உறுதி செய்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

பேருந்து புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சாரதி மற்றும் நடத்துனர் இருவரையும் பரிசோதனை செய்வதற்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews