ஆசிரியைகளின் ஆடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை – ஆசிரியைகளுக்கு பொருந்தாது என விளக்கம்

பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியைகளுக்கு பொருத்தமான வசதியான ஆடைகளை அணிவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்று பொது நிர்வாக அமைச்சினால் செப்டம்பர் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஆசிரியைகளுக்கு பொருந்தாது என நாலந்தராமய விஹாரையின் பீடாதிபதி பாலித தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், ஆசிரியைகளுக்கு பாடசாலைகளுக்குச் செல்வதற்கு மிகவும் மென்மையான ஆடைகளை அணிவதற்கான வாய்ப்பை வழங்குமாறு கல்விச் செயலாளரிடம், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் இலங்கை 2,600 வருடங்கள் பழமையான பௌத்த கலாசாரத்தையும் அடையாளத்தையும் கொண்ட நாடாகும் என பீடாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 2,600 வருடங்கள் பழமையான பௌத்த கலாசாரம்

பௌத்த பிக்குகள், இராணுவத்தினர், பொலிஸ், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தனித்துவமான சீருடைகளைக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், செயலாளர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கேற்ப, நாட்டிலுள்ள ஆசிரியர்கள் அல்லது மாணவர்களின் சீருடைகளை மாற்ற முடியாது. அப்படி நடந்தால், ஒரு பெரிய பேரழிவு கண்டிப்பாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் கூட, பெண்களின் ஆடைகள் பெண்களுக்கும், ஆண்களின் ஆடைகள் ஆண்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது

இந்த வழக்கத்தை புறக்கணிப்பது இந்த நாட்டிற்கு மிகவும் பேரழிவை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

எனவே, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சீருடைகளை வெளிப்புற ஆதாரங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற அனுமதிப்பார் என நான் நம்பவில்லை என்றும் பாலித தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கலாசாரம் மற்றும் அடையாளத்தை சீர்குலைக்கும் வகையில் அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews