ஏறாவூர் நகர் பாடசாலைகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயலமர்வு

மாணவர்களை மையப்படுத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயலமர்வுகள் ஏறாவூர் நகர் பாடசாலைகளில் இன்று முன்னெடுக்கப்பட்டன.

ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் எம் எஸ்.நளீம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் சுத்தமானதும் பசுமையானதும் போதையற்ற ஏறாவூரை நோக்கி எனும் கருப்பொருளில் பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கான போதையொழிப்பு விழிப்புணர்வு செயலமர்வுகள் ஏறாவூர் நகர் பாடசாலைகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இரண்டாவது நாளான இன்றைய தினம் ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை, ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை, ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் எம் எஸ் .நளீம் தலைமையில் இடம்பெற்றது.

செயலமர்வில் வளவாளராக பாதுகாப்பு அமைச்சின் தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்தின் வடக்கு கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் பஸீர் முகம்மட் றசாத் கலந்துகொண்டார்
நிகழ்வில் புனர்வாழ்வு தினைக்களத்தின் இணைப்பாளர் கேணல் கலகெதர, மாவட்ட குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சந்திரகுமார, பிரதேச செயலக போதை ஒழிப்பு பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தயாளன் உட்பட பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews