முகாமாலையில் காணப்பட்ட கைக் குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது…!

கிளிநொச்சி முகமாலையில் உள்ள கோவானக்குளத்தில் இருந்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

குறித்த குளத்தினை அபிவிருத்திக்காக பார்வையிடச் சென்ற கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவின் இணைப்பு செயலாளர் சுமுது தலைமையிலான குழுவினரால் குறித்த கைக்குண்டு அடையாளம் காணப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பகுதியை ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து படையினரின் உதவியுடன் கண்ணிவெடி அகற்றும் மனிதநேய பணியாளர்களால் குறித்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews